மண் லாரியை சிறை பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்த அதிமுக எம்எல்ஏ
1033 views
சப்ஸ்கிரைப் virudhunagar வீடியோஸ்விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் மதுரை முதல் செங்கோட்டை வரை புதியதாக நான்கு வழிச்சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.இந்நிலையில் நான்கு வழிச்சாலை அமைப்பதற்கு விடியா திமுக அரசு ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த ஒப்பந்தகாரருக்கு அனுமதி வழங்கியுள்ளது.வெளி மாநிலத்தைச் சார்ந்த ஒப்பந்தக்காரர் ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் இருக்கும், திமுக நிர்வாகிகளிடம் தொடர்பு கொண்டு நான்கு வழி சாலை அமைப்பதற்கு மண் எடுத்து தர வேண்டும் என்று கூறியதாகவும் அதற்கு அதிக அளவில் பணம் தருவதாக பேரம் பேசியதாகவும் கூறப்படுகிறது.இந்நிலையில் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பிள்ளையார்குளம் ஊராட்சியில் துலுக்கன்குளம் கன்மாயில் வருவாய்துறை அதிகாரிகளின் துணையுடன் திமுக நிர்வாகிகள் சட்ட விரோதமாகவும் அனுமதிக்கப்பட்ட அளவை விட மண் அள்ளி வருவதாக பொதுமக்களிடையே புகார் எழுந்தது.இந்நிலையில் மண் அள்ளும் கண்மாய்க்கு சென்ற அதிமுக சட்டமன்ற உறுப்பினர் மான்ராஜ் ஆய்வு செய்த போது உரிய அனுமதியின்றி வேறு தாலுகாவின் மண் அள்ளும் பாசை வைத்து ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதி கன்மாயில் மண் எடுப்பதும்,அதிகமாக 10 அடிக்கு மேல் தோண்டப்பட்ட இடங்களில் புதிய சாலை அமைக்கும் பணிக்காக தோண்டப்படும் எதற்கு உதவாத மண்களை எடுத்து வந்து திருட்டுத்தனமாக நிரப்பும் பணி நடைபெற்ற நிலையில் மண் அள்ளி வந்த லாரிகளை எம்எல்ஏ சிறைபிடித்தார்.அரசு அதிகாரிகளான தாசில்தார்,கிராம நிர்வாக ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்ட வருவாய் துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தும் சம்பந்தப்பட்ட இடத்திற்கு யாரும் வராததால் ஆத்திரமடைந்த அதிமுக எம்எல்ஏ சாலை மறியலில் ஈடுபடுவதாக தெரிவித்த நிலையில் காவல்துறையினர் எம்எல்ஏவிடம் பேச்சு வார்த்தை நடத்தி மண் திருட்டு கும்பல் மீது வழக்கு பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்து சிறைபிடித்து வைத்த வாகனத்தை பறிமுதல் செய்து காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அரசு அதிகாரிகள் மீதும் மண் அள்ளிய திருட்டு கும்பல் மீதும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றால் பொதுமக்களை திரட்டி மிகப்பெரிய போராட்டம் நடத்தப் போவதாக அதிமுக எம்எல்ஏ மான்ராஜ் எச்சரித்துள்ளார்.திமுக ஆட்சியில் தொடர் மண் மற்றும் மணல் திருட்டு நடைபெறுவதும், அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் உடந்தையாக இருப்பதும் பொது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.