ஸ்ரீ திரௌபதி அம்மன் கோவில் தெப்பல் உற்சவ திருவிழா
1049 views
Subscribe விழுப்புரம் videosவிழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ திரௌபதியம்மன் ஆலயம் அமைந்துள்ளது, இந்த ஆலயத்தில் வருடம் வருடம் சித்திரை மாத உற்சவ திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம், இந்நிலையில் இந்த வருட திருவிழாவை முன்னிட்டு கடந்த மாதம் 10-ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கிய நிலையில் நேற்று முன்தினம் தீமிதி திருவிழா நடைபெற்று முடிந்தது, மேலும் நேற்று இரவு திரௌபதி அம்மன் கோவிலில் தெப்ப உற்சவ திருவிழாவை முன்னிட்டு காலை முதலே பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது, இதையடுத்து நேற்று மாலை திரௌபதி அம்மன் கோவில் அருகில் அமைந்துள்ள குளத்தில் தெப்பல் உற்சவ திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது இந்த திருவிழாவை காண்பதற்காக செங்கல்பட்டு, புதுச்சேரி ஆகிய பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தெப்பல் உற்சவ திருவிழாவை கண்டுகளித்தனர்.