ஆரம்ப சுகாதார நிலையத்தை இடமாற்றம் செய்ய எதிர்ப்பு: சாலை மறியலில் ஈடுபட்ட கிராம மக்கள்!
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த காவனூர் பகுதியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வேண்டுமென பல ஆண்டுகளாக பொதுமக்கள் கோரிக்கை வைத்து வந்தனர் இந்த நிலையில் கடந்த சட்டமன்ற பேரவையின் கூட்டத்தொடரின் போது காவனூர் பகுதியில் புதிதாக ஆரம்ப சுகாதார நிலையம் அமைப்பதற்கான அரசாணை வழங்கப்பட்டுள்ளது.இதன் காரணமாக தற்பொழுது காவனூர் பகுதியில் போதிய இடம் வசதி இல்லை என தெரிவித்து புதிதாக அமையவிருக்கும் ஆரம்ப சுகாதார நிலையத்தை காவனூர் அடுத்த புங்கனூர் கிராம பகுதியில் அமைக்கப்பட திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது இந்த விவகாரத்தின் காரணமாக ஆத்திரமடைந்த காவனூர் பகுதியை சேர்ந்த கிராம பொதுமக்கள் காவனூர் பேருந்து நிலையம் அருகே உள்ள நான்கு வழி சாலை செல்லும் பாதைகளை மரித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்..மேலும் இந்த சாலை மறியல் போராட்டத்தின் போது காவனூர் கிராம மக்களின் கோரிக்கையை ஏற்று சட்டப்பேரவையில் ஆரம்ப சுகாதார நிலையம் காவனூர் பகுதியில் அமைப்பதற்கு அரசாணை வெளியிட்ட அடிப்படையில் அந்த பகுதியிலேயே புதிய ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வேண்டும் என தெரிவித்து அப்பகுதி கிராம பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் என அனைவரும் கொளுத்தி வரும் வெயிலையும் பொருட்படுத்தாமல் எதிர்ப்புகள் அடங்கிய நோட்டீசை கைகளில் வைத்துக்கொண்டு பல்வேறு கோஷங்களை எழுப்பியவாறு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.இந்த மறியல் போராட்டம் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக நீடித்து வருவதால் அப்பகுதியில் பெரிதும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது..
Curated by Palanikumar M|TimesXP Tamil|23 May 2023