வத்தலக்குண்டு அருள்மிகு முத்துமாரியம்மன் கோயில் வைகாசித் தெப்பத் திருவிழா!
திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டுவில் பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ முத்து மாரியம்மன் கோவில் வைகாசித் திருவிழா கடந்த 2- வாரங்களாக நடைபெற்றுவந்த நிலையில், நாள்தோரும் அம்மன் புஷ்ப பல்லாக்கு முத்துப்பல்லாக்கு என நகர்வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாளித்தார்.பக்தர்களும் நேர்த்திக்கடனாக அம்மனுக்கு தீச்சட்டி, பால்குடம் ,முளைப்பாறி என செலுத்தினர்.இந்நிலையில் வைகாசித்திருவிழாவின் முக்கிய நிகழ்வாக மறுபூஜையான இன்று தெப்பத்திருவிழா நடைபெற்றது. அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் அலங்கரிக்கப்பட்டு தண்ணீர் நடுவில் மின் அலாங்காரத்துடன் மிதவையில் அமர்ந்து பக்தர்களுக்கு காட்சி தந்தார். முன்னதாக பக்தர்கள் மாவிளக்கு எடுத்துவந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இந்த விழா பக்தர்களின் பெறும் வரவேற்பை பெற்றதுடன் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது குறிப்பிடத்தக்கது. முன்னதாக நேர்த்திக்கடனாக மாவிளக்கு வைத்து நேர்த்திக்கடனை நிறைவேற்றினர்.
Curated by Palanikumar M|TimesXP Tamil|31 May 2023