பட்டியலினமக்கள் மற்றும் சிறுபான்மையினருக்கு முன்னுரிமை வேண்டி விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் பேரனி
திருப்பூர் மாவட்டம் உடுமலையில் பட்டியலின மக்கள் பழங்குடியினர் இதர பின் தங்கிய வகுப்பினர் சிறுபான்மையினருக்கு முன்னுருமை வேண்டி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் பேரனி நடத்த பட்டது.விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துப்புரவு தொழிலாளர் மேம்பாட்டு தொழிற்சங்கம் சார்பில் கு.விடுதலை மணி தலைமையில் நடத்தபட்ட இந்த பேரணியில் கோவைமண்டல செயலாளர் சுசி.கலையரன் பொள்ளாச்சி நாடாளுமன்ற தொகுதி செயலாளர் அப்பன்குமார் திருப்பூர் மாவட்ட செயலாளர் சதீஸ்குமார் மற்றும் இம்மானுவேல் அருன்குமார் சையது இப்ராகிம் மா.காசி. நா.ராசமானிக்கம் உள்ளிட்டோ சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர்.முக்கிய சாலைகள் வழியாக வீடற்றோர்க்கு வீட்டுமனை பட்டா வேண்டியும் அனைவருக்கும் வாழ்ந்திட மன்னுரிமை வேண்டுமெனவும் கோசமிட்டு சென்றனர்.இறுதியாக வட்டாட்சியரை சந்தித்து வீடற்றோர்க்கு இலவச வீட்டுமனை வழங்கிட வலியுறுத்தி மனு கொடுத்தனர்.இந்நிகழ்வில் காங்கிரஸ் தி.மு.கஉள்ளிட்ட பல்வேறு கட்சிகளை சார்ந்த முக்கிய நிர்வாகிகளும் ஏராளமான விடுதலை சிறுத்தை தொண்டர்களும்.கலந்து கொண்டனர்.
Curated by Palanikumar M|TimesXP Tamil|26 Apr 2023