நெல்லை கோவிந்தர் கும்பாபிஷேகம் விழா !
Subscribe திருநெல்வேலி videos
நெல்லை நெல்லையப்பர் திருக்கோவிலில் உள்ள நெல்லை கோவிந்தர் மூலவர் திருமேனியில் சிறிய அளவிலான பின்னம் ஏற்பட்டிருந்ததை தொடர்ந்து, அதனை சரி செய்யும் பொருட்டு திருக்கோவில் நிர்வாகம் திருப்பணிகள் தொடங்க கடந்த பிப்ரவரி 14,2022ல் நெல்லை கோவிந்தர் மூலவர் பாலாலய பூஜைகள் செய்யப்பட்டு கடந்த 15 மாதங்களாக திருப்பணி நடைபெற்று மூலவர் விக்ரகம் புதிப்பக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து நெல்லை கோவிந்தனுக்கு கும்பாபிஷேகம் செய்யத் திட்டமிடப்பட்டு நேற்றைய தினம் முதல் யாகசாலை பூஜைகள் தொடங்கி நடைபெற்றது விநாயகர் அணிக்கையுடன் தொடங்கிய கும்பாபிஷேக பூஜைகள் இன்று மதியம் யாகசாலை பூஜையுடன் நிறைவு பெற்றது இதனை தொடர்ந்து யாகசாலையில் வைத்து சிறப்பு பூஜைகள் செய்யப்பட்ட கலசங்களை சிவாச்சாரியார்கள் கோவிலை வலம் வர சுமந்து சென்று நெல்லை கோவிந்தருக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது இந்த விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம் செய்தனர்