நெல்லை பள்ளி திறப்பிற்கும் முன்பாக பேருந்துகளை ஆய்வு !
1011 views
Subscribe திருநெல்வேலி videosநெல்லை சந்திப்பு பழைய பேருந்து நிலையம் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் இடிக்கப்பட்டு புதிதாக பேருந்து நிலையம் கட்டப்பட்டது கட்டி முடிக்கப்பட்டு பல மாதங்கள் ஆகியும் இன்னும் திறக்கப்படாமல் உள்ளது இதனால் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுவதாக கூறி சந்திப்பு வியாபாரிகள் சங்கத்தினர் தமிழக போக்குவரத்து துறை அமைச்சரை சந்தித்து மனு ஒன்றை அளித்து விரைவில் பேருந்து நிலையத்திற்குள் பேருந்துகளை அனுமதிக்கும்படி கேட்டுக் கொண்டனர் மேலும் பள்ளி மாணவ மாணவி வசதிக்காக பள்ளி திறப்பதற்கு முன்பாக பேருந்து நிலையத்தில் பேருந்துகளை அனுமதிப்பது குறித்து மாநகர காவல் துறை ஆணையாளர் ராஜேந்திரன் மாநகராட்சி ஆணையாளர் சிவ கிருஷ்ணமூர்த்தி காவல் துணை ஆணையாளர் அனிதா தலைமையில் சந்திப்பு பழைய பேருந்து நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டனர் சந்திப்பு பேருந்து நிலையத்தில் பேருந்துகளை விரைவில் அனுமதிப்பது குறித்து ஆலோசனை நடத்தினர் இதில் அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் மாநகராட்சி அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்