மின்னல் தாக்கியதில் ஏற்பட்ட காட்டுத் தீ
1038 views
Subscribe திருநெல்வேலி videosதென்காசி மாவட்டம் கடையம் பகுதியில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி அமைந்துள்ளது. இதில் களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் கடையம் வனச்சராக பகுதிக்கு உட்பட்ட வனப் பகுதியில் திடீரென மின்னல் தாக்கியது. இந்நிலையில் கடையம் வனத்துறை பகுதிக்கு உட்பட்ட ஆம்பூர் பீட் வனப்பகுதியில் தீ பற்றியது. மரங்கள் நிறைந்த அடர்ந்த வனப்பகுதியில் காய்ந்த சருகுகளில் தீப்பிடித்ததால் வேகமாக பரவியது. மேலும் வனப் பகுதியில் பலத்தக் காற்று வீசுவதால் தீ வேகமாக பரவியது. தகவல் அறிந்ததும் கடையம் வனச்சரக வனவர்கள், வனக்காப்பாளர்கள் மற்றும் வேட்டைத் தடுப்புக் காவலர்கள் தீயை அணைக்கும் முயற்ச்சியில் ஈடுபட்டுள்ளனர். இரவிலும் தீ பரவி வரும் நிலையில் தீயை கட்டுப்படுத்துவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது