ஓபிஎஸ் தரப்பில் நடைபெறும் மாநாட்டிற்கு நூற்றுக்கணக்கான வாகனங்களில் தொண்டர்கள் பயணம்!
திருச்சியில் இன்று ஓபிஎஸ் தரப்பில் நடைபெறும் மாநாட்டிற்கு தமிழகத்தில் பல்வேறு பகுதியில் இருந்து தொண்டர்கள் குவிந்து வரும் நிலையில் தேனி மாவட்டம் ஓபிஎஸ் சொந்த தொகுதியான போடி சட்டமன்ற தொகுதியில் இருந்து நூற்றுக்கணக்கான பேருந்துகள் கார்கள் மற்றும் வேன்களில் தொண்டர்கள் உற்சாகத்தோடு ஓபிஎஸ் வாழ்க எடப்பாடி ஒழிக என்று கோசமிட்டபடி கிளம்பினர்.போடி நகர் ஒன்றியம் தவிர்த்து மற்ற பகுதிகளான தேனி ஒன்றியம் சின்னமனூர் ஒன்றியம் சேர்ந்த போடி தொகுதியில் ஒட்டுமொத்தமாக 300-க்கும் மேற்பட்ட வாகனங்கள் திருச்சி மாநாட்டிற்கு சென்றுள்ளது.காவல்துறையினர் மாநாட்டிற்கு செல்லும் வாகனங்களை பதிவு செய்து அனுப்பி வருகின்றனர்.இரட்டை இலை சின்னம் பொருத்தப்பட்ட கொடிகளுடன் வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து திருச்சி மாநாட்டிற்கு சென்று கொண்டிருக்கிறது.மாநாட்டிற்கு போடி சட்டமன்ற தொகுதியைச் சேர்ந்த நகர் ஒன்றிய கவுன்சிலர்கள் ஊராட்சி மன்றம் ஒன்றிய குழு தலைவர்கள் பேரூர் கழக தலைவர்கள் என அனைவரும் மாநாட்டிற்கு கலந்து கொள்வதற்காக சென்றுள்ளனர்.theniTimesXP TamilUpdated: 24 Apr 2023, 3:12 pm