தமிழக அரசின் இரண்டாண்டு சாதனை விளக்க கூட்டம்!
1049 views
Subscribe தேனி videosதேனி அருகே உள்ள முத்துதேவன்பட்டியில் தமிழக அரசின் ஈராண்டு சாதனை விளக்க கூட்டம் மற்றும் அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது.ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, தொழிலாளர் நலத்துறை, பொது சுகாதாரம் மற்றும் மருத்துவ துறை, வேளாண்மை துறை உள்ளிட்ட பல துறைகளின் கீழ் 850 பயனாளிகளுக்கு 8 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.நிகழ்ச்சியில் அமைச்சர் ஐ.பெரியசாமி பேதம் போது,தமிழக அரசு அனைத்து தரப்பு மக்களின் கோரிக்கைகளையும் நிறைவேற்றும் அரசாக செயல்பட்டு வருகிறது.சாலை வசதி, குடிநீர் வசதி, மின்சார வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதிலும் தமிழக அரசு முனைப்புடன் செயலாற்றி வருவதாக என தெரிவித்தார்.அரசின் திட்டங்கள் மற்றும் சாதனைகள் அடங்கிய விளக்க கையேடுகளை அமைச்சர் வெளியிட்டார்.நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் ஷஜீவனா, தேனி நகராட்சித் தலைவி ரேணு ப்ரியா, சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர்