பெரியகுளம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் மிதமான கனமழை
பெரியகுளம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக கொட்டி தீர்த்த மிதமான கனமழைவிவசாயிகள் பொதுமக்கள் மகிழ்ச்சிதேனி மாவட்டம் பெரியகுளம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் சுற்றுவட்டார பகுதியில் மழை பெய்து வந்தது அதனை தொடர்ந்து நேற்று வெயிலின் தாக்கம் கடுமையாக அதிகரித்து மழை பெய்யாது போனது.அதைத் தொடர்ந்து இன்றும் காலை முதல் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டு வந்த நிலையில் மாலை வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு இரவு திடீரென மிதமான கனமழை பெய்தது.மேலும் இந்த மழையானது தேனி மாவட்டம் அதன் சுற்று வட்டார பகுதிகளான பெரியகுளம், வடுகபட்டி, ஜெயமங்கலம், சில்வார்பட்டி, லட்சுமிபுரம், தேவதானப்பட்டி, ஜெயமங்கலம், மேல்மங்கலம், உள்ளிட்ட பகுதிகளில் கடந்த ஒரு மணி நேரத்திற்கும் மேலாக மிதமான கனமழை கொட்டி தீர்த்தது. இந்நிலையில் தேனி மாவட்டம் பெரியகுளத்தை சுற்றியுள்ள பகுதிகளில் கோடையில் பெய்த கன மழையால் வெப்பத்தின் தாக்கம் குறைந்து குளிர்ச்சி நிலவியதால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.theniTimesXP TamilUpdated: 30 May 2023, 12:24 pm