ஆண்டிப்பட்டியில் பழைய இரும்பு கடையில் பயங்கர தீவிபத்து!
1045 views
Subscribe தேனி videosதேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி நகரில் வேலப்பர் கோவில் சாலையில் குமார் என்பவருக்கு சொந்தமான பழைய இரும்பு கடை உள்ளது-. இன்று மதியம் கடையின் உரிமையால் கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றார். இந்தநிலையில் பூட்டியிருந்த கடையின் உள்ளே இருந்து திடீரென புகை வந்தது. சிறிதுநேரத்தில் தீ மளமளவென கடை முழுவதும் பரவி கொழுந்துவிட்டு எரிந்தது. தீவிபத்து ஏற்பட்ட கடையின் அருகில் பெட்ரோல் பல்க் மற்றும் ஏராளமான குடியிருப்புகள் இருந்ததால் தீ மற்ற பகுதிகளுக்கும் பரவும் அபாயம் உருவானது. மேலும் பற்றி எரிந்த தீயினால் குடியிருப்பு பகுதிகளில் கரும்புகை சூழ்ந்ததால் பொதுமக்களிடையே அச்சம் ஏற்பட்டது. இந்த தீவிபத்து குறித்து தகவல் கிடைத்ததும் ஆண்டிப்பட்டி தீயணைப்புத்துறையினர் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். அருகில் இருந்த பெட்ரோல் பல்க் முன்எச்சரிக்கை நடவடிக்கையாக மூடப்பட்டது. சுமார் ஒருமணிநேரம் போராடி தீயணைப்புத்துறையினர் தீயை அணைத்தனர். ஆண்டிப்பட்டியில் பழைய இரும்புக்கடை தீப்பற்றி எரிந்து கரும்புகை குடியிருப்பு பகுதிகளில் புகுந்ததால் பொதுமக்களிடையே பெரும் அச்சம் ஏற்பட்டது.