கோடை கால நீச்சல் பயிற்சி முகாம்!
1111 views
Subscribe தமிழ்நாடு videosதமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மூலம் மாவட்ட தலைநகரங்களில் திறந்தவெளி விளையாட்டு அரங்கம் செயல்பட்டு வருகிறது. இங்கு கோடை காலத்தில் மாணவ, மாணவிகளுக்கு, கால்பந்தாட்டம், பூப்பந்து, கூடைப்பந்து, ஹாக்கி உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுகளுக்கு சிறப்பு பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது. இங்குள்ள நீச்சல் குளத்தில் 7 வயதுக்கு மேற்பட்ட சிறுவர், சிறுமிகளுக்கு, சிறப்பு நீச்சல் பயிற்சி வகுப்புகள் ஆண்டுதோறும் கோடை காலத்தில் நடைபெறுவது வழக்கம். தினமும் காலை 2 மணி நேரமும் மாலையில் 2 மணி நேரமும் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. தினமும் ஒரு மணி நேரம் என 12 நாட்களுக்கு பயிற்ச்சிக்கான கட்டணமாக ரூ.1180 வசூலிக்கப்படுகிறது. இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்து 50க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் நீச்சல் பயிற்சியினை பயின்று வருகின்றனர். இப்பயிற்சியின் உடல் ஆரோக்கியத்துடன் புத்துணர்ச்சி அளிப்பதாகவும், இக்கட்டான சூழ்நிலையில் தங்களை தற்காத்துக் கொள்ளவும் பிறரை காப்பாற்ற பயிற்சி உதவ இப்பயிற்சி உதவுவதாக மாணவ மாணவிகளும் பெற்றோர்களும் தெரிவித்தனர். இது போன்ற கோடைகால நீச்சல் பயிற்சி முகாமினை பயனுள்ளதாக மாற்றியமைக்க மாணவ, மாணவிகளும், பெற்றோர்களும் முன் வர வேண்டும் என பயிற்றுனர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.