ஶ்ரீ திரௌபதையம்மன் கோயில் ஆண்டு திருவிழா
1030 views
Subscribe தமிழ்நாடு videosநாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் அடுத்த இலுப்பூரில் அருள்மிகு ஸ்ரீ திரௌபதையம்மன் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் ஆண்டு தீமிதி திருவிழா கடந்த 15 ம் தேதி பூச்சொரிதல் மற்றும் கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து தர்மர், கர்ணன் கிருஷ்ணன் அம்பாள் பிறப்பு நிகழ்ச்சிகள் மற்றும் கமலக்கண்ணி திருமணம், அம்பாள் திருக்கல்யாணம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றநடைப்பெற்று வந்தது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தீமிதி திருவிழா இரவு வெகு விமர்சையாக நடைப்பெற்றது. காப்புகட்டி விரதமிருந்த சுமார் 100 க்கும் மேற்பட்ட பக்தர்கள் தீமிதித்து தங்களது நேர்த்திகடனை செலுத்தினர். தொடர்ந்து திரௌபதியம்மனுக்கு சந்தன காப்பு அலங்காரம் செய்யப்பட்டு நடைபெற்ற சிறப்பு மகா தீபாரதனையில் சுற்றுவட்டார பகுதிகளைச் சேரந்த திரளான பக்தர்கள் கலந்துக் கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தீமிதி திருவிழாவை முன்னிட்டு நடைப்பெற்ற கண்கவர் வானவேடிக்கை நிகழ்ச்சி மற்றும் தப்பாட்டக் குழுவினரின் சிறப்பு தப்பாட்ட நடன நிகழ்ச்சி பார்வையாளர்கள் அனைவரையும் வெகுவாக கவர்ந்தது.