ஆத்தூர் மஞ்சள் மூட்டைகள் ஏலம்!
1032 views
Subscribe சேலம் videosசேலம் மாவட்டம் ஆத்தூரில் செயல்பட்டு வரும் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் மஞ்சள் ஏலம் நடைபெற்று வருகிறது, அதைதொடர்ந்து இச்சங்கத்திற்கு ஆத்தூர் மட்டுமின்றி பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, திட்டக்குடி, உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் மஞ்சள் மூட்டைகளை விற்பனை செய்ய கொண்டு வருகிறார்கள், இங்கு கொண்டு வரப்படும் மஞ்சள் மூட்டைகளை சேலம் ,ஈரோடு, கோவை, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த மஞ்சள் வியாபாரிகள் இங்கு வந்து மறைமுக ஏலத்தில் கலந்து கொண்டு மஞ்சள் மூட்டைகளை கொள்முதல் செய்து செல்கிறார்கள், அதைதொடர்ந்து ஆத்தூர் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் நடைபெற்ற மஞ்சள் ஏலத்தில் விவசாயிகள் கொண்டு வந்த 2830 மஞ்சள் மூட்டைகள் ₹1.15 கோடிக்கு விற்பனை செய்யப் பட்டுள்ளது, இதில் விராலி ரகம் மஞ்சள் (குவிண்டால்)) 3,569 முதல் 8,439 ரூபாய்க்கும்,உருண்டை ரகம் மஞ்சள் (குவிண்டால்)) 3,069 ரூபாய் முதல் 6,669 ரூபாய்க்கும், பனங்காளி தாய் மஞ்சள் (குவிண்டால்)) 9,899 ரூபாய் முதல் 13,789 ரூபாய் வரை மறைமுக ஏலத்தில் கலந்து கொண்ட வியாபாரிகள் மஞ்சள் மூட்டைகளை கொள்முதல் செய்தார்கள்