ஸ்ரீ தர்ம முனிஸ்வரன் திருக்கோயிலில் வர்ஷாபிஷேக விழா!
1092 views
Subscribe ராமநாதபுரம் videosராமநாதபுரம் மாவட்டம் பட்டனம் காத்தான் ஊராட்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமைந்திருக்கும் ஸ்ரீ மல்லம்மாள் காளியம்மன் ஸ்ரீ தர்ம முனிஸ்வரன் திருக்கோயிலில் சோபகிருது வருடம் சித்திரை மாதம் 19ஆம் தேதி இன்று வருஷாபிஷேக விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. அதனைத் தொடர்ந்து மங்கல இசை வாத்தியம், இரண்டாம் கால யாக பூஜை மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு வருஷாபிஷேக தீபாரனை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து கோ பூஜை மற்றும் யாகசாலை பூஜைகள் செய்யப்பட்டு சரியாக 10 35 மணிக்கு அம்பாளுக்கு விசேஷ மகா அபிஷேகம் வருஷாபிஷேக கும்ப பஜனை அபிஷேகம் மகா தீபாரணை நடைபெற்றது. இந்த அபிஷேகத்தில் மஞ்சள், திரவியம், இளநீர், சந்தனம், பால் உள்ளிட்ட 16 வகையான திரவியங்களால் ஸ்ரீ மல்லம்மாள் காளியம்மனுக்கு விசேஷ அபிஷேகங்கள் நடைபெற்று தீபாவனை காண்பிக்கப்பட்டது. இதில் சுமார் சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர். வந்திருந்த அனைவருக்கும் சிறப்பான அன்னதானமும் நடைபெற்றது.