மேல்நிலை நீர் தேக்க தொட்டி அடித்தூணில் லாரி மோதல்
1035 views
Subscribe புதுக்கோட்டை videosவிராலிமலை அருகே மேல்நிலை நீர் தேக்க தொட்டி அடித்தூணில் லாரி மோதல், அதிர்ஷ்டவசமாக பெரும் விபத்து தவிர்ப்புவிராலிமலை அருகே உள்ள கோயில்காட்டுப்பட்டி பகுதி பொதுமக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதற்காக ரூபாய் ஏழு லட்சம் செலவில் கடந்த 2012 ஆம் ஆண்டு பத்தாயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர் தேக்க குடிநீர் தொட்டி கட்டப்பட்டு அப்பகுதி குடியிருப்புகளுக்கு குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அவ்வழியாக சென்ற டிப்பர் லாரி கட்டுப்பாட்டை இழந்து குடிநீர் தொட்டியின் அடியில் உள்ள நான்கு தூணில் ஒரு தூண் மீது மோதியது இதில் தூணின் சிமெண்ட் காரைகள் பெயர்ந்து விழுந்தது மோதிய வேகத்தில் அடுத்த தூண் மீது மோதியிருந்தால் மேல்நிலை நீர் தேக்க தொட்டி கீழே விழுந்து பெரும் விபத்து ஏற்பட்டிருக்கும் அதிர்ஷ்டவசமாக லாரி மோதிய வேகத்தில் ஒரு தூணோடு நின்று விட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது