திராவிட மாடல் அரசின் இரண்டு ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டங்கள் நடைபெற்றது
திமுக தலைவர் மு க ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு அரசின் இரண்டு ஆண்டு காலம் முடிவடைந்து மூன்றாவது ஆண்டில் அடியெடுத்து வைப்பதை முன்னிட்டு தமிழகம் முழுவதும் திராவிட மாடல் அரசின் இரண்டாண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டங்கள் நடைபெற்றது. அதன்படி திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி ஒன்றியத்துக்கு உட்பட்ட அம்மையப்பன் மற்றும் கண்கொடுத்தவணிதம் பகுதிகளில் திமுக ஒன்றிய செயலாளர் பாலச்சந்தர் தலைமையில் சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான பொது மக்களுக்காக கொண்டனர். இதே போல கூத்தாநல்லூர் லட்சுமாங்குடி கடை வீதியில் நடைபெற்ற சாதனை விளக்க பொதுக் கூட்டத்தில் திமுக மாவட்ட செயலாளரும் திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன் கலந்து கொண்டு உரையாற்றினார். தொடர்ந்து திருவாரூரில் நடைபெற்ற சாதனை விளக்க கூட்டத்தில் முன்னாள் எம்எல்ஏ நாகை அசோகன் கலந்து கொண்டு உரையாற்றினார். இதேபோல குடவாசல் எரவாஞ்சேரி பகுதியில் நடைபெற்ற சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் குடவாசல் திமுக ஒன்றிய செயலாளர் ஜோதிராமன் மூன்றாவது ஆண்டில் அடியெடுத்து வைப்பதை கொண்டாடும் வகையில் பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினார்tamilnaduTimesXP TamilUpdated: 8 May 2023, 12:17 pm - TimesXP Tamil
- tamilnadu
- Public Meetings Were Held To Review The Two-year Achievements Of The Dravidan Model Government