அடிக்காமலேயே அடிபைப்பில் தண்ணீர் வரும் வைரல் வீடியோ!
1772 views
Subscribe மயிலாடுதுறை videosஎன்னதான் மின்மோட்டார் வைத்து தண்ணீர் பிடித்தாலும், பழங்காலத்தில் இருந்து தற்போது வரை அடிபம்புக்கு தனி மவுசு உண்டு. அடிபம்பில் தண்ணீர் அடித்தால் பூமியில் இருந்து சுத்தமான நீர் கிடைப்பதுடன், அடிபம்பில் தண்ணீர் அடித்தால் உடல் வலிமை மற்றும் ஆரோக்கியம் கிடைப்பது என்பது கூடுதல் சிறப்பு. ஆனால் நாகையில் உள்ள அடுபம்பு ஒன்றில் அடிக்காமலேயே தானாகவே தண்ணீர் ஊற்றும் வீடியோ காட்சிகள் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. நாகை சட்டயப்பர் கோவில் தெருவில் உள்ள அடி பைப்பில் தானாகவே தண்ணீர் ஊற்றுவதை அப்பகுதியினர் ஆர்வத்துடன் பார்த்து செல்கின்றனர். கோடை வெயிலில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் நிலையில், அடிபைப்பில் தானாகவே தண்ணீர் வெளியாகி வருவது குறித்து விசாரித்தபோது நகராட்சி குடிநீர் குழாயில் திருகு பைப்பிற்கு பதிலாக அடிபம்பில் இணைப்பு கொடுக்கப்பட்டதுதான் காரணமென தெரியவந்துள்ளது.