இளையராஜா அப்படி செய்ய மாட்டார்
இளையராஜா அப்படி செய்ய மாட்டார்
இளையராஜா சாதி சார்ந்து இருக்கும் விஷயத்தை அவர் வாழ்க்கையில் ஒரு நாளும் செய்ய மாட்டார். - தனியார் திருமண நிச்சயதார்த்த விழாவில் இயக்குனர் பாரதிராஜா பேட்டி.மதுரை நாகமலை புதுக்கோட்டையில் இன்று நடைபெற்ற தனியார் திருமண நிச்சயதார்த்த விழாவில் இயக்குனர் பாரதிராஜா கலந்து கொண்டார்.நிச்சயதார்த்த விழாவில் கலந்து கொண்ட பாரதிராஜா மணமக்களை வாழ்த்தினார். இதனைத் தொடர்ந்து செக்கானூரணி அமர் மீடியா தயாரிப்பில் உருவாகிய சூப்பர் சிங்கர் புகழ் செந்தில் விக்னேஷ் மற்றும் ராஜலட்சுமி பாடிய பாடல்களை இயக்குனர் பாரதிராஜா வெளியிட்டார்.இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த இயக்குனர் பாரதிராஜா பேசுகையில்மாடர்ன் லவ் சென்னை தொடர் வெளியானதையடுத்து இளம் இயக்குனர் போட்டியாக இயக்க உள்ளேன் என்பது குறித்த கேள்விக்கு.?மாடர்ன் லவ் தொடரை விட மிகவும் அற்புதமான படைப்புகளை இயக்க உள்ளேன் அதை மக்கள் விரைவில் காணப் போகிறார்கள் என்று அவர் கூறினார்.இளையராஜா மீது சாதிய சாயம் பூசப்பட்டு வருகிறது என்பது குறித்த கேள்விக்கு.?இளையராஜா சாதி சார்ந்து இருக்கும் விஷயத்தை அவர் வாழ்க்கையில் ஒரு நாளும் செய்ய மாட்டார் என்று தெரிவித்தார்.Updated: 6 Jun 2023, 3:26 pm