அதிமுக சார்பில் உறுப்பினர்கள் சேர்க்கை முகாம்
1091 views
Subscribe காஞ்சிபுரம் videosசெங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் தெற்கு ஒன்றிய அதிமுக சார்பில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை முகாம் இன்று திருக்கழுக்குன்றம் அடுத்த ஒரகடம் கிராமத்தில் நடைபெற்றது. அதிமுக பொறுப்பாளர் சுரேஷ் (எ)ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற முகாமில் செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட செயலாளர் திருக்கழுக்குன்றம் எஸ் ஆறுமுகம் கலந்து கொண்டு முகாமினை துவக்கி வைத்து சிறப்புரை ஆற்றினார் அதனை தொடர்ந்து விண்ணப்பப் படிவத்தில் உறுப்பினர்களிடம் கையொப்பம் வாங்கினர். நிகழ்ச்சியில் மாவட்ட துணை செயலாளர் எஸ்வந்த்ராவ் திருப்போரூர் ஒன்றிய செயலாளர்கள் நந்தகுமார், தையூர் எஸ் குமரவேல் உள்ளிட்ட அதிமுகவினர் பலர் கலந்து கொண்டனர்.