காமராஜர் சிலை முன்பாக காங்கிரஸ் வெற்றி கொண்டாட்டம்
1041 views
Subscribe தமிழ்நாடு videosதிண்டுக்கல்லில் காமராஜர் சிலை முன்பாக கர்நாடகாவில் காங்கிரஸ் வெற்றி பெற்றதை கொண்டாடும் விதமாக தொண்டர்கள் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம் .கர்நாடகாவில் தற்பொழுது நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலின் முடிவுகளை இந்தியாவே உற்று நோக்கி பார்த்து கொண்டு இருக்கும் பொழுது .இன்று காலை முதல் கர்நாடகாவில் தேர்தல் அறிவிப்புகளானது வெளியாகி வந்த நிலையில் கர்நாடகாவில் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியானது முன்னிலை அடைந்து வருவதாலும் கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி அமையம் சூழ்நிலை இருப்பதால் திண்டுக்கல் காங்கிரஸ் கட்சியின் சார்பாக காங்கிரஸ் கட்சியினர் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து பட்டாசுகள் வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடி வருகின்றனர்.