வரும் காலத்தில் தெரியும் யார் BOSS..யாரு BOSS இல்லன்னு - அண்ணாமலைதிமுக கோப்பு பாகம்-2 (DMK FILES PART TWO) கோவையில் வெளியிடப்படும்- பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேட்டி. முதலமைச்சர் வெளிநாடு செல்ல வேண்டும் அதற்கு மத்திய அரசும் அனுமதி வழங்கியுள்ளது. அதே சமயம் வெளிநாடு சென்று விட்டு வரும்பொழுது எதனைக் கொண்டு வந்திருக்கிறோம் என்பது மிகவும் முக்கியம். இதற்கு முன் அவர் துபாய் சென்று வந்தது குறித்தும் பல்வேறு அமைச்சர்கள் வெளிநாடுகளுக்கு சென்று வந்தது குறித்தும் அறிக்கை வெளியிட வேண்டும். கடந்த இரண்டரை ஆண்டுகளாக தமிழ்நாட்டிற்கு என்ன என்ன திட்டங்கள் வந்துள்ளது என்பதை கூறுங்கள் அடுத்த இரண்டரை ஆண்டுகளுக்கு உங்களுடைய திட்டங்கள் என்ன என்பதை கூறுங்கள்.அண்டையில் உள்ள கர்நாடக மாநிலத்திற்கு 50 சதவிகித முதலீடு ஒரு மாநிலத்திற்கு செல்கிறது. பல்வேறு மாநிலங்கள் முன்னேறி வருகிறது நம்முடைய வேகம் குறைந்துள்ளது. எனவே முதலமைச்சரின் உள்ளே அறிக்கைக்காக காத்திருக்கிறோம். உதயநிதி பவுண்டேஷன், ரெட் ஜெயன்ட் மூவி எல்லாம் மணிலாண்டரி, திமுக வந்த பிறகு பல்வேறு விஷயங்களை மணிலாண்டாரியாக மாற்றி உள்ளது. தற்போது நடைபெற்று வரும் இந்த வருமானவரித்துறை சோதனை ஒரு இரு நாட்களில் முடிவது போல் தெரியவில்லை. தமிழகம் தற்போது இந்தியாவில் நான்காவது பொருளாதார மாநிலமாக உள்ளது. இந்நிலையில் மதுவிற்கு அடிமையாகி வந்தால் பஞ்சாப்பை போல் மதுவிற்கு அடிமையான மாநிலமாக தமிழ்நாடு மாறிவிடும். அதேபோல் நடைபெறுகின்ற சோதனைகளுக்கு என் மீது பழி போடுவதை நான் ஏற்றுக் கொள்ள முடியாது. தமிழ்நாட்டையே சாராய மாநிலமாக மாற்றி இருக்கக்கூடிய ஒரு அமைச்சர் சோதனையை பற்றி பேசுவது வேடிக்கையாக இருக்கிறது. வருமான வரித்துறை அறிக்கை வெளியிடும் வரை நாம் பொறுத்திருக்கலாம். 2000 ரூபாய் நோட்டுகளை செப்டம்பர் மாதத்திற்குள் மாற்றிவிட பிரதமர் கூறினால் அது டிராமா என சொல்கிறார்கள். பாராளுமன்றத்தில் செங்கோலை வைத்தால் அதனையும் பாஜகவின் டிராமா எனக் கூறுகிறார்கள். அதேபோல் தற்பொழுது சோதனை நடைபெற்றால் அதனையும் டிராமா எனக் கூறுகிறார்கள். அப்படி என்றால் நீங்கள் எதை செய்தீர்கள் என மக்களிடம் தெரிவியுங்கள். ஆவின் குறித்து முதலமைச்சர் எழுதிய கடிதம் ஒரு டிராமா என நான் கூறுகிறேன். ஏனென்றால் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு பால் வாங்கும் அளவு 35 லட்சத்திலிருந்து 32 லட்சமாக குறைந்துள்ளது. தற்போது பால்வளத்துறை அமைச்சர் உள்ளார்கள். ஆவினின் செயல்பாடு குறையை மறைப்பதற்காக அமுல் மீது பழி சுமத்துவது என்பதுதான் டிராமாவே தவிர நாங்கள் செய்வது ட்ராமா இல்லை. செங்கோலில் சோழர் காலத்து தமிழ் எழுத்துக்கள் இல்லை தற்போதுள்ள நடைமுறை தமிழ் எழுத்துக்கள் தான் உள்ளது என கருத்துக்கள் பரப்பப்பட்டு வருவது குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர், அது மிகவும் நல்லது தான், அனைவருக்கும் புரியக்கூடிய எழுத்துக்கள் அதில் இருந்தால் அதனை பார்த்து படிக்கலாம். DMK files எவ்வளவு நீட்டாக உள்ளது என்பதை நீங்கள் பாருங்கள். அந்த இரண்டாம் பாகம் முழுவதுமே திமுக ஆட்சிக்கு வந்த பிறகு என்னென்ன செய்திருக்கிறார்கள் என்பது தான் அதில் இருக்கும். என் மண் என் மக்கள் என்ற பயணம் ஜூலை ஒன்பதாம் தேதி துவங்க உள்ளது. அந்த பயணத்தில் ஊழலை பற்றி மட்டும்தான் பேச உள்ளோம். ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கு செல்லும் பொழுதும் அங்குள்ள திமுகவின் ஊழலை பற்றி தான் பேசப் போகிறோம். DMK FILES 2ல் திமுகவை சேர்ந்தவர்களும் திமுகவை சாராதவர்களும் இருக்கிறார்கள். கஷ்டப்பட்டு ஒவ்வொருவரும் இன்ஜினியர் மருத்துவர் ஆனால் கலைஞரின் பேனா மையில் தான் மருத்துவர் ஆனார் கலைஞரின் பேனா மையில் தான் இன்ஜினியர் ஆனார் என என் கூறுகிறீர்கள் இன்னொருவர் குழந்தைக்கு பெயர் வைப்பதா அசிங்கமாக இல்லையா?. அதேபோல் நான் ஒன்று கேட்கிறேன் கலைஞரின் குடும்பத்தில் பிறந்தவர்கள் எத்தனை பேர் ஐஏஎஸ், ஐபிஎஸ் ஆனார்கள்?திமுகவின் அரசியலே வட இந்தியர்கள், தென் இந்தியர்கள் என உள்ளது. தற்பொழுது உள்ள தமிழர்களை ஐஏஎஸ் ஐபிஎஸ் ஆகவில்லை என்றால் எப்படி அவர்கள் தமிழ்நாட்டிற்கு வந்து வேலை செய்வார்கள்?. கடந்த 10 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் உள்ள ஐஏஎஸ் ஐபிஎஸ்ஐ பூதக்கண்ணாடியை கொண்டு தேடும் நிலமையாக உள்ளது. இன்னும் சில ஆண்டுகள் கழித்து பார்த்தால் பத்துக்கு ஒன்பது பேர் வட இந்திய அதிகாரிகளாக இருப்பார்கள். பழைய சோறு டாட் காம் விவகாரம் குறித்து எனக்கு ஒன்றும் தெரியாது. எங்கெல்லாம் விதிமுறைகளை மீறி பார்கள் நடைபெறுகிறதோ அங்கெல்லாம் முற்றுகை இடுவோம் என கோவை மாவட்ட பாஜக தெரிவித்துள்ளது. ஜூன் 10ஆம் தேதிக்குள் பாஜக சார்பில் வெள்ளை அறிக்கை அளிக்க உள்ளோம். அந்த வெள்ளை அறிக்கையில் அடுத்த மூன்று ஆண்டுகளுக்கான திட்டங்கள், 75% டாஸ்மாக்கை மூடுவது, கள் மூலமாக வரக்கூடிய வருமானம் வருமான இழப்பை சரி செய்வது அனைத்தையும் நாம் கூறியுள்ளோம். அதை வைத்து ஒரு டிபைட் நடக்க வேண்டும் என்பதுதான் எங்களுடைய ஆசை. DMK FILES 2 வை கோவையில் வெளியிடுவோம். என்னை எந்த அரசியலில் கட்சி இருக்கக் கூறுகிறதோ ஒரு ரூபாய் பணம் கூட அளிக்காமல் தேர்தலில் நிற்பேன். தற்போது ஆட்சியில் இருப்பவர்கள் செய்யும் ஊழலை சுட்டிக் காட்டுவது போல் ஆட்சியில் இருந்தவர்கள் செய்ததையும் கூற வேண்டிய கடமை உள்ளது. ஹிஜாப் அணியக்கூடாது என மருத்துவரை பாஜகவினர் மிரட்டியதாக வந்த செய்தி குறித்து கேள்வி எழுப்பியதற்கு, பத்திரிக்கையில் வந்திருக்கக்கூடிய செய்தி தவறானது, இருதரப்பினரின் விளக்கத்தையும் நாம் கேட்க வேண்டும். இஸ்லாமிய பெண்கள் ஹிஜாப் அணிவதற்கு உரிமை உள்ளது அதனை கேட்பதற்கு பாஜகவிற்கு உரிமை இல்லை. இங்கு நடந்திருக்க கூடிய சம்பவம் என்பது, வேறு. அங்கிருந்தவர் ஹிஜாப் பற்றி பேசவில்லை ஏன் தாமதமாக மருத்துவர்கள் வந்தார்கள் என்றுதான் கேள்வி எழுப்பியுள்ளார். பிறகு அது அரசியல் சண்டையாக மாறி உள்ளது என்றார்.