அரசின் 2ம் ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம்!
1043 views
Subscribe தமிழ்நாடு videosசிவகங்கை நகர் திமுக சார்பில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் தலைமையிலான திராவிட மாடல் அரசின் ஈடில்லா ஆட்சியின் 2 ம் ஆண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் சிவகங்கை அரண்மனை வாசலில் சண்முகராஜா கலையரங்கில் கூட்டுறவுத்துறை அமைச்சர், மாவட்ட கழக செயலாளரும் ஆன கேஆர்.பெரியகருப்பன் தலைமையில் நடைபெற்றது மாவட்ட,நகர, ஒன்றிய கழக நிர்வாகிகள் பங்கேற்றனர் சிவகங்கை நகர் கழக செயலாளர், நகர்மன்றத்தலைவர் CM.துரை ஆனந்த் ஏற்பாட்டின் பேரில் நடைபெற்ற திராவிட மாநகராட்சியின் இரண்டு ஆண்டு சாதனைகள் குறித்து தலைவர்கள் பேசினார்கள் திமுக தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதியில் 85 சதவீத வாக்குறுதிகளை நிறைவேற்றியதை எடுத்துரைத்தும் ஈடில்லா ஆட்சி அதற்கு இரண்டே ஆண்டு சாட்சி என்று அமைச்சர் கே ஆர் பெரிய கருப்பன் பேசினார் தொடர்ந்து மூன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு, இந்த இரண்டு ஆண்டுகளில் மகளிருக்கு கட்டணமில்லாத இலவச பஸ் பேருந்து சேவை 46 கோயில்களில் தமிழில் அர்ச்சனை செய்யும் முறைதேர்வாணையத்தின் அனைத்து தேர்வுகளிலும் தமிழ் மொழி தகுதித் தேர்வு கட்டாயம் அனைத்து வகை ஆவின் பால் விலையை லிட்டர் ஒன்றுக்கு ரூ.3 குறைத்தது இல்லம் தேடி கல்வித் திட்டம் வேளாண்மைக்கு தனி நிதிநிலை அறிக்கை முதன்முறையாக அறிமுகம் தமிழ் வளர்ச்சித்துறை விருதுகளுக்கு ரூ.1 லட்சத்திலிருந்து ரூ.2 லட்சமாக உயர்த்தப்பட்டது.உலக செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நடத்தியது கூட்டுறவு நிறுவனங்களில் 5 பவுனுக்குள் நகைக்கடனுக்கு ரூ.4818.88 கோடி தள்ளுபடி ரூ.2755.99 கோடி மகளிர் சுயஉதவிக்குழு கடன் தள்ளுபடி பள்ளி குழந்தைகளுக்கு காலை உணவுத் திட்டம் இது போன்று இன்னும் ஏராளமான திட்டங்களை செயல்படுத்தியிருப்பதாக அமைச்சர் பெரியகருப்பன் பேசினார்.