நத்தம் பகுதியில் 1 மணி நேரம் இடியுடன் கூடிய பலத்த மழை
1043 views
Subscribe தமிழ்நாடு videosதிண்டுக்கல் மாவட்டம் நத்தம் பகுதியில் கடந்த சில நாட்களாக கடுமையான வெயில் வாட்டி வதைத்தது. மக்கள் பகல் நேரங்களில் வெளியில் வருவதை தவிர்த்து வந்தனர். இன்று காலை முதலே கடுமையான வெயில் வாட்டி வதைத்தது. இந்நிலையில் இன்று மாலையில் திடீரென இடி மின்னலுடன் கூடிய பலத்த மழை சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பெய்தது. இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இதைப்போலவே நத்தம் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராம பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது. திடீரென பெய்த மழையினால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியதால் பொதுமக்களும், விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.