தற்கொலை செய்து கொள்ளும் எண்ணம் பரம்பரையாக வரக்கூடியதா?
Subscribe ஹெல்த் டிப்ஸ் videos
தற்கொலை செய்துகொள்ள பல காரணங்கள் இருக்கலாம். உயிரியல் காரணம் biological, உளவியல் காரணங்கள் psychological சமூக நிலை social போன்ற 3 காரணங்கள் முக்கியமாக பார்க்கப்படுகின்றன. தற்கொலை செய்து கொள்பவர்கள் மரபணு வழியில் கூட இதை பெறுகிறார்கள் என்று கண்டறிந்துள்ளது ஆய்வு ஒன்று. சமீபகாலமாக சிறு பிள்ளைகளும் தற்கொலை செய்துகொள்வதை பார்க்க முடிகிறது. நிதானத்தில் யோசித்து ஆராய்ந்து செல்பவர்கள் கூட எமோஷானலான நிலையில் சட்டென்று இந்த முடிவை எடுத்துவிடுகிறார்கள். இன்னும் சிலர் படிப்படியாக தற்கொலை செய்து கொள்ள தயாராகிறார்கள். தற்கொலை எண்ணம் வரும் போது என்ன செய்வது, யாரிடம் உதவி கோருவது, எப்படி இதை தடுக்க வேண்டும் என்பது குறித்து இந்த வீடியோவில் விளக்குகிறார் மனநோய் சிகிச்சை நிபுணர் மிதுன்பிரசாத்.