புற்றுநோய் வராமல் தடுக்க தடுப்பூசி இருக்கா?
1100 views
Subscribe ஹெல்த் டிப்ஸ் videosபுற்றுநோய் தடுப்பு முறைகளும் சிகிச்சை முறைகளும் எவ்வளவுக்கு எவ்வளவு அதிகரித்திருக்கிறதோ அதே அளவுக்கு புற்றுநோய் பாதிப்பும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. உலக அளவில் நுரையீரல் புற்றுநோய்க்கு அடுத்ததாக கர்ப்பப்பை வாய் புற்றுநோய் அதிகரித்திக்கிறது. இந்த புற்றுநோய்க்கான சிகிச்சை முறைகள் அதிகரித்திருப்பதால் நாம் செய்ய வேண்டிய முதல் விஷயம். அறிகுறிகள் தென்பட்டாலோ அல்லது குறிப்பிட்ட வயதுக்கு மேலோ ஆகும்போது பரிசோதனை செய்து தெரிந்து கொள்வது நல்லது. பரிசோனைக்குப் பின் ஆபத்து காரணிகள் இருந்தால் முன்கூட்டியே தடுப்பூசி போன்றவற்றை எடுத்துக் கொள்ள முடியும். இதுபோல இன்னும் செய்ய வேண்டிய விஷயங்கள் என்னென்ன என்பது குறித்து மகப்பேறியல் மருத்துவர் டாக்டர் புவனேஸ்வரி விளக்கமாக எடுத்துக் கூறியிருக்கிறார்.